உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை மற்றும் கோட்லாம்பாக்கம் தொடக்கப் பள்ளிகளுக்கு 2024--2025ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.பேரணியை அண்ணா கிராம வட்டார கல்வி அலுவலர்கள், கோபிநாதன், புவனேஸ்வரி துவக்கி வைத்தனர். பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !