உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்

 ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதைத்தொடர்ந்து, தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமியை வழிபட்டுவர். அந்த வகையில், கார்த்திகை 1ம் தேதியையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் அதிகாலை முதல், விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், கோவில் அருகில் உள்ள மணிமுகாற்றில் நீராடி, குருசாமியிடம் துளசி மாலை அணிந்து விரத்தை துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !