உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பாலமுருகன் சுவாமி புதிய உற்சவர் சிலை வீதியுலா 

 பாலமுருகன் சுவாமி புதிய உற்சவர் சிலை வீதியுலா 

விருத்தாசலம்: கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு, புதிய உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டு, சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. இதையொட்டி, கோவிலில் உள்ள விநாயகர், சிவலிங்கம், பாலமுருகன், நவக்கிரகங்கள் மற்றும் மாரியம்மன் கோவிலில் உள்ள மகா மாரியம்மன், செல்லியம்மன், அய்யனார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவர் சிலை கொண்டு வரப்பட்டு விழா நடந்தது. பின்னர், புதிய உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தது. அதன்பின், கைலாய வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடன், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி புதிய உற்சவர் சிலை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை