உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழங்குடியின இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி ஏற்பாடு

பழங்குடியின இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி ஏற்பாடு

கடலுார்: கடலுார் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகு கலை, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பயிற்சி கால அளவு 45 நாட்கள் ஆகும். பயிற்சி காலத்தின் போது உணவு, தங்கும் விடுதி உள்ளிட்ட செலவு களை தாட்கோ நிறுவனம் ஏற்கும். பயிற்சியை சென்னையில் தங்கி, முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் சான்றிதழ் வழங்குகிறது. பயிற்சியின் மூலம் தனியார் அழகு நிலையங்களில் வேலை செய்ய வாய்ப்புகள் பெறமுடியும். கடலுார் மாவட்டத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் ஆதார், பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ