உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டுரை போட்டியில் பங்கேற்க பாரதிதாசன் மன்றம் அழைப்பு

கட்டுரை போட்டியில் பங்கேற்க பாரதிதாசன் மன்றம் அழைப்பு

கடலுார்: காந்தி, திருப்பூர் குமரன், வள்ளலார் மற்றும் அப்துல் கலாம் ஆகிய தலைவர்கள் பிறந்த நாளில் பிறந்தவர்களுக்கு பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. இதுகுறித்து பாரதிதாசன் இலக்கிய மன்றத் தலைவர் நாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: காந்தி, திருப்பூர் குமரன், வள்ளலார் மற்றும் அப்துல் கலாம் ஆகிய தலைவர்கள் பிறந்த நாளில் பிறந்தவர்களுக்கும், கலாம் பற்றிய சிறந்த கட்டுரைக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன்படி, அக்., 2, 4,5,15 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதற்கு ஆதாரமாக ஆதார் அட்டையை படம் எடுத்து 9865354678 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், அதிசயமான தலைவர் அப்துல்கலாம் என்ற தலைப்பில் 2 பக்கம் கட்டுரை எழுதி பள்ளி மற்றும் வீட்டு முகவரி, மொபைல் எண்ணுடன் வரும் 10ம் தேதிக்குள், எண் 41, காமராஜர் நகர், ஆல்பேட்டை, கடலுார் என்ற மன்றத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பரிசளிப்பு விழா, இடம், நாள் குறித்த நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ