பைக் விபத்து இருவர் பலி
வேப்பூர்: வேப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேற்கு வங்க மாநிலம், கல்மாவை சேர்ந்தவர் சுபல்ராணா, 54. கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலையில் தங்கி பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆலையின் எதிரே சேலம் - கடலுார் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த பஜாஜ் பல்சர் மோட்டார் பைக், சுபல்ராணா மீது மோதியது. இதில், சுபல்ராணா, 54, மோட்டார் பைக்கை ஓட்டி வந்த வேப்பூர் அடுத்த லட்சுமணபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 18; இருவரும் பலத்த காயமடைந்தனர்.வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.