உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பார்வையற்றோர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

பார்வையற்றோர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் விண்மீன் பார்வையற்றோர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். விண்மீன் பார்வையற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் நாகலிங்கம், செயலாளர் தெய்வீகன், பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். சிவாஜி பொது நல பேரவை, அண்ணா தனியார் பஸ் பொது நல தொழிலாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை, வெண்புறா பொது நல பேரவை, சமூகநீதி பாசறை, திருவள்ளுவர் அச்சக உரிமையாளர்கள் நல சங்கம், மீனவர் விடுதலை வேங்கைகள், பஸ் நிலைய சிறுவியாபாரிகள் நலச்சங்கம் உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.திருச்சி அரசு பார்வையற்றோர் பள்ளியில் மாணவியின் மர்ம சாவுக்கு காரணமான விடுதி பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை