உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் தொகுதியில் களமிறங்கும் பா.ம.க.,

கடலுார் தொகுதியில் களமிறங்கும் பா.ம.க.,

வரும் லோக்சபா தேர்தலில் பா.ம.க., எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் கடலுார் தொகுதியை வாங்கியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா இந்த தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடலுார் லோக்சபா தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். ஒருவேளை தேர்தலில் வெற்றி வாய்ப்பு கை நழுவினாலும் ராஜ்யசபா எம்.பி., யாக சவுமியா அன்புமணி பொறுப்பேற்க போவது நிச்சயம் என்று பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி