உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆற்றில் மிதந்த மாற்றுத்திறனாளி உடல்; போலீஸ் விசாரணை

 ஆற்றில் மிதந்த மாற்றுத்திறனாளி உடல்; போலீஸ் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த காவனுார் மணிமுக்தாற்றங்கரையில் நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இது குறித்து அறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இறந்து மிதந்த நபர் பெரியகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான் மகன் கொளஞ்சிநாதன், 47, என்பதும், மாற்றுத்திறனாளி என்பதும் தெரிந்தது. கடந்த 15ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே வந்தவர் ஆற்றில் இறந்து கிடந்தது தெரிந்தது. இது தொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்