மேலும் செய்திகள்
வேளங்கிராயன்பேட்டை அருகே மீனவர் உடல் மீட்பு
18-Dec-2024
கடலுார்; கோட்டக்குப்பம் அருகே கடலில் மாயமான கல்லுாரி மாணவர் உடல், கடலுார் அருகே நேற்று கரை ஒதுங்கியது.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் கிருத்திக்க்ஷன்,19, கோயம்புத்துார் தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தந்தையும் மகனும் கடந்த 29ம் தேதி படகில் பிள்ளைச்சாவடி கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பி வந்துள்ளனர். அப்போது, ஜி.பி.ஆர்.எஸ்., கருவி கடலில் விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக கிருத்திக்க்ஷன் கடலில் குதித்தபோது அலையில் சிக்கி மாயமானார். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கடலுார் அடுத்த அக்கரக்கோரி கடல் முகத்துவாரத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் கிருத்திக்க்ஷன் உடல் கரை ஒதுங்கியது. கடலுார் துறைமுகம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
18-Dec-2024