உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை நகரில் ரூ.29 லட்சத்தில் போர்வெல்

அண்ணாமலை நகரில் ரூ.29 லட்சத்தில் போர்வெல்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட திருவேட்களம் பகுதியில், வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2023--24 பொது நிதி திட்டத்தில், 29 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் பழனி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் அன்பரசு, வேலு, விஜயலட்சுமி, சந்திரா, தேவிகா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் முத்துக்குமார், ஆனந்தன், கருணாநிதி, செல்வராஜ், மணிமாறன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ