உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற வரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று ஜங்ஷன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடைவீதி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், 41, என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மகேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி