உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு வெடித்து சிறுவன் காயம்

பட்டாசு வெடித்து சிறுவன் காயம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இரங்கல் ஊர்வலத்தில் சிதறி கிடந்த பட்டாசுகளை கையில் எடுத்த போது, திடீரென வெடித்து சிதறியதால் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம், வயலுாரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் யாதவ்ஸ்ரீ, 10; நகராட்சி துவக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறார். இவரது வீட்டின் வழியாக நேற்று மாலை 5:00 மணிக்கு இரங்கல் ஊர்வலத்தில் சிலர் பட்டாசு வெடித்தனர். அதில், சிதறி கிடந்த பட்டாசுகளை சிறுவன் விளையாட்டாக கையில் எடுத்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. அதில், இடது கையில் படுகாயடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது கையில் 8 தையல்கள் போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளார். விருத்தாசலம் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ