பிராமணர் சங்க முப்பெரும் விழா
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில் முப் பெரும் விழா நடந்தது. கிளை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாநில மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பேசினார். அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர் ஹர்ஷினியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. விழாவில், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் மணிகண்டன், மகளிரணி செயலாளர் புவனா, மகாலட்சுமி, இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், சட்ட ஆலோசகர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நடந்த கூட்டத்தில், காட்டுமன்னார்கோவில் வேத புஷ்கரணி குளத்தை சுத்தம் செய்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் வேங்கடகணபதி நன்றி கூறினார்.