மேலும் செய்திகள்
பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்
08-Oct-2024
கடலுார்: சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பிராமணர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென, தமிழ்நாடு பிராமணர் சங்க கடலுார் மாவட்டத் தலைவர் அருணாசலம் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை:பிராமணர்கள் மீதான அவதுாறு பிரசாரம் மற்றும் பொய் பிரசாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிராமணர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வரும் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், கடலுார் மாவட்ட பிராமணர் சங்க நிர்வாகிகள், பிராமணர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
08-Oct-2024