உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி

புவனகிரி, : கீரப்பாளையம் வயலூரில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவியர், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவியர் 16 பேர், கீரப்பாளையம் அருகே வயலுார் கிராமத்தில் தங்கி, பேராசிரியர் நடராஜன் வழிகாட்டுதல் படி விவசாயிகளிடம் நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர். அப்போது, பல்வேறு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். வயலுார் சமுதாய நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழுவின் தலைவி சுபாஷினி வரவேற்றார். ஊராட்சி தலைவர் கனகம்ராசு பேரணியை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சந்திராசோலை, ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் முன்னிலை வகித்தனர். முகாமில் கிராம சுய உதவி குழுவினர், விவசாயிகள், மாணவியர் பங்கேற்றனர். துணைத் தலைவி சவுந்தர்யா நன்றி கூறினார்.பேரணியின்போது, புற்று நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுங்கள் பொது மக்களிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி