உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மோதி கார் சேதம்

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மோதி கார் சேதம்

கடலுார்: கடலுாரில், தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி, கார் சேதமானது.போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, தற்காலி டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை, உளுந்துார்பேட்டையை சேர்ந்த தற்காலிக டிரைவர் வெங்கடேசன் ஓட்டினார். பஸ் கடலுார் அண்ணா பாலத்தில் சென்றபோது, பிரேக் பிடிக்காததால், முன்னால் சென்ற கார் மீது மோதியது. அதில், காரின் பின்பகுதி சேதமடைந்தது. அதிஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ