உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு

பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு

விருத்தாசலம் : விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன் மகன் ஜெனித், 22; ரஜினி மகன் ராஜேஷ், 22; வைத்தியநாதன் மகன் பரணிதரன், 21; சிவபிரகாசம் மகன் ரஞ்சித், 22. இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் குப்பநத்தம் மாரியம்மன் கோவில் அருகே கபடி போட்டி நடத்துவதாக, விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தனர்.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் ஜெனித் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை