உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா வைத்திருந்த இருவர் மீது வழக்கு

கஞ்சா வைத்திருந்த இருவர் மீது வழக்கு

புவனகிரி : புவனகிரியில் கஞ்சா வைத்திருந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். புவனகிரி லிங்க பைரவி நகரில் சுற்றித்திரிந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.அவர்கள், கீரப்பாளையம் காந்தி நகர், சஞ்சீவ்குமார், புவனகிரி, பெரியதேவாங்கர் தெரு விஜய் என்பதும், கஞ்சா புகைக்க வைத்திருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை