மேலும் செய்திகள்
மாணவி மாயம்
31-Mar-2025
நடுவீரப்பட்டு; கால்வாய் கட்டும் போது ஏற்பட்ட தகராறில் 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் அதே பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார். கால்வாய் கட்டும் இடம் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது சொந்தமான இடம் என்று கூறினார். வி.ஏ.ஓ.,மூலமாக இடத்தை அளவீடு செய்ததில், கால்வாய் கட்டும் இடம் அரசுக்கு சொந்தமான இடம் எனத் தெரிந்தது. இதையடுத்து மீண்டும் கட்டுமான பணி துவங்கிய போது, லட்சுமணன், உறவினர் துளசிநாதன்,சித்ரா மற்றும் கடலுார் புதுப்பாளையம் சந்துரு ஆகியோர் ராமதாஸ், இவரது மனைவி ரீனாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பதிலுக்கு ராமதாஸ், துளசிநாதனை தாக்கினர்.இருதரப்பு புகாரின் பேரில், ராமதாஸ், துளசிநாதன் உட்பட 6 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
31-Mar-2025