காதலியை ஏமாற்றிய காதலன் மீது வழக்கு
சிதம்பரம்; காதலித்த பெண்ணை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் விஜய் ,28; சிதம்பரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த விஜய், வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதனையறிந்த அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விஜய் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.