உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து தாக்குதல் இருவர் மீது வழக்கு

வீடு புகுந்து தாக்குதல் இருவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே வீடு புகுந்து தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பாலுார் சன்னியாசிப்பேட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜகாந்தம், 65; இவருக்கு சொந்தமான புளியமரத்தின் கிளைகள் காற்றில் உடைந்தது. இவற்றை அப்பகுதியை சேர்ந்த சிவக்குமார்,இவரது மகன் வள்ளல் ஆகிய இருவரும் ராஜகாந்தத்திற்கு தெரியாமல் வெட்டிச் சென்றனர்.இதனை ராஜகாந்தம் மகன் அருள்செல்வன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், வள்ளல் இருவரும் வீடு புகுந்து அருள்செல்வத்தை திட்டி ,தாக்கினர்.புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் சிவக்குமார், வள்ளல் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி