உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசப்பற்று பாடலுடன் தீச்சுடர் சிலம்பம் விளையாடியவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

தேசப்பற்று பாடலுடன் தீச்சுடர் சிலம்பம் விளையாடியவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கிள்ளை: சிந்துார் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தை பாராட்டி, சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் கிராமத்தில், படகோட்டி சிலம்ப கலைக்கூட பயிற்சியாளர் வைத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது மகன் அதியமான், மகள் ஆதிஸ்ரீ ஆகியோர் தேசப்பற்று பாடலுடன், 45நிமிடங்கள் தீச்சுடர் சிலம்பம் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., அருள் தலைமை தாங்கி, சிலம்பம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பா.ஜ., ராணுவ வீரர் பிரிவு முன்னாள் மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன் சிலம்ப நிகழ்ச்சியில், சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் ராமச்சந்திரன், ரவி, வாசுதேவன், குமார் மற்றும் கிராம நிர்வாகிகள்பாஸ்கர், தமிழச்சி ரமேஷ், கணேசன், சின்னையன் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியாளர் வைத்தி கார்த்திகேயன், நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை