உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் : அ.தி.மு.க. நிர்வாகி ஆருடம்

 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் : அ.தி.மு.க. நிர்வாகி ஆருடம்

கடலுார்: கடலுார் தெற்கு மாவட்டம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிகளின் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் பாகக்கிளை செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் நடந்தது. கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், பக்த ரட்சகன், அம்மா பேரவை செயலாளர் ராஜசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தபாஸ்கர் வரவேற்றார். அமைப்பு செயலாளர்கள் கோபால், ராஜமாணிக்கம், மாலதி, ஜெயசூர்யா வினோத், ஆகியோர் பேசினர். இதில், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசியதாவது: தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் தான் உள்ளது. மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். குறிஞ்சிப்பாடி, நெய்வேலி தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெறச்செய்து, கடலுார் தெற்கு மாவட்டம் கோட்டை என நிரூபிக்க வேண்டும். தமிழகத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் பழனிசாமி தலைமையில் ஆட்சி மலரும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை