லாரி மீது கார் மோதி சென்னை பெண் பலி
ராமநத்தம்,: ராமநத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை பெண் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். சென்னை, பக்தவத்சலம் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார், 47; இவர் நேற்று தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், ராஜபாளையத்திலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை ராஜ்குமார், 47; ஓட்டினார். நேற்று பகல் 1:15 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோடு அருகே வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் ராஜ்குமார் மனைவி பூர்ணாதேவி, 40; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார், 47, துருவன், 7, ஹாசினி, 11, ஹேமலதா, 45, சுவாதி, 20, ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.