முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, போட்டிகளை துவக்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இறகுப்பந்து, கபடி, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, ஹேண்ட் பால், கோ கோ, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.