உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் நல்லாயன் பாலர் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் சகாயராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அய்யப்பன் எம்.எல்.ஏ., கடந்த 2024-25ம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி, பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். விழாவில், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை