உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார் ; கடலுார் அரசு போக்குவரத்துக் கழ பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மண்டல துணை பொதுச்செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மண்டல துணைத்தலைவர் தேவராஜூலு, துணை பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, பணிமனை தலைவர் சபியுல்லா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் பழனிவேல், மண்டல பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.அரசு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் மற்றும் ஒப்பந்த நடைமுறையை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சொசைட்டிக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை விழுப்புரம் கோட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துணைத்தலைவர் பாஸ்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை