உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

நெய்வேலி : தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துறையினர் கடந்த 13 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, என்.எல்.சி., - சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க பொதுச் செயலாளர் திருஅரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், போக்குவரத்து கடலுார் மண்டல தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் முருகன். முன்னாள் சி.ஐ.டி.யூ., பொருளாளர் குப்புசாமி, நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் பென்ஷனர் அசோசியேஷன் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். தொழிற்சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி