உறவினர்களுடன் மோதல்: 5 பேர் மீது வழக்கு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது அண்ணன் அதே பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இந்த நிலையில், தட்சணாமூர்த்தியின் மனைவி லோகவள்ளி தனது வீட்டில் இருந்த செடிகளை வெட்டினார். அப்போது, அது தனஞ்செயன் வீட்டு மின் கம்பியில் பட்டது. இதை தனஞ்செயன் மனைவி பிரியதர்ஷினி தட்டிக்கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த லோகவள்ளி, அவரது உறவினர்கள் லோகேஷ், முருகையன் ஆகிய மூவரும் தனஞ்செயன் மற்றும் பிரியதர்ஷினிடம் தகராறு செய்தனர். இதில் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் பிரியதர்ஷினி, லோகவள்ளி ஆகிய இருவரும் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.