உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேவல் சண்டை: 5 பேர் கைது 

சேவல் சண்டை: 5 பேர் கைது 

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னாண்டிக்குழி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சேவல் சண்டை நடத்திய கொள்ளிடத்தை சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷ், 25; பு.முட்லுார் மேட்டுக்குப்பம் தேவராஜ் மகன் சஞ்சய், 22; குப்புசாமி மகன் விஜய், 22; காந்தி நகர் மதியழகன் மகன் சதீஷ், 22; பெரியகுமட்டி பூராசாமி மகன் ஹரி கிருஷ்ணன், 21; ஆகியோரை கைது செய்து, நான்கு பைக்குகள் மற்றும் நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ