உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் ஆய்வு

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் ஆய்வு

திட்டக்குடி ;திட்டக்குடியில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் அருண்தம்புராஜ் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பெருமுளை கிராமத்தில் அங்கன்வாடி செயல்பாடுகள், சிறுமுளையில் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் 9 கோடியே 10லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் தடுப்பணை பணிகளை ஆய்வு செய்தார். திட்டக்குடி அரசு மருத்துவமனை செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.மாலை, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்றார். எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ.,ராஜசேகரன், திட்ட இயக்குனர் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு செய்யும் தகவலறிந்த திட்டக்குடி தாலுகா பகுதி பொதுமக்கள், காலை முதல் காத்திருந்து, மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ