கல்லுாரி மாணவி தற்கொலை
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளுர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் ரம்யா, 17. இவர் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவருக்கு சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனமுடைந்த கல்லுாரி மாணவி நேற்று காலை தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.