உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவர்கள் தர்ணா

கல்லுாரி மாணவர்கள் தர்ணா

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி முன், இரண்டு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் கடந்த கல்வியாண்டில் பி.காம்., படித்த மாணவர்கள் மதிவாணன், சிவானந்தம்.இருவரும் மாற்று சான்றிதழ் வேண்டி நேற்று கல்லுாரிக்கு சென்றனர். அப்போது, துறைத் தலைவர் கண்ணகி, மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தால் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இருவரும் கல்லுாரியில் போராட்டத்தில் ஈடுபட்டதால், கடிதம் கேட்டதாக கூறப்படுகிறது.இதில், ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும் நேற்று மாலை கல்லுாரி வளாகத்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை