உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கல்லுாரி மாணவர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, கடலுார் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை திடீரென கல்லுாரி நுழைவு வாயில் முன் திரண்டு, அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவப்படத்தை கிழித்தும், எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை கலைந்து போக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ