உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கல்லுாரி மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு

 கல்லுாரி மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு

பண்ருட்டி: கவிதை மற்றும் பேச்சுப்போட்டியில் வென்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் , மாவட்ட அளவில் கவிதை, பேச்சுப்போட்டி, கடலுார் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த அக்டோபரில், நடந்தது. இதில் கவிதை போட்டியில் ஜான்டூயி கல்லுாரியை சேர்ந்த 3ம் ஆண்டு மாணவி மங்கையர்க்கரசி முதலிடமும், பேச்சுபோட்டியில், 3ம் ஆண்டு மாணவி ஜோதிகா 2ம் இடமும் பெற்றார். இதையொட்டி, மங்கையர்க்கரசிக்கு, ரூ.10 ஆயிரம் மற்றும் ஜோதிகாவிற்கான, ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இருவரிடமும் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை