| ADDED : பிப் 29, 2024 11:57 PM
கடலுார்: கடலுார் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழாவினை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் பொற்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் செல்வம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஷகிதா பானு முன்னிலை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் கதிரவன் திட்ட நோக்கவுரையாற்றினார். இதில், மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 7 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 4 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.அப்போது, அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி., கூட்டு மருத்துவர் ஸ்ரீதரன், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அனிதா, எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ராஜேஸ்வரி, மதிப்பீடு மற்றும் கணக்காய்வு உதவியாளர் கெஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.