உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பறிமுதல் வாகனங்கள் ரூ.12.27லட்சத்திற்கு ஏலம்

பறிமுதல் வாகனங்கள் ரூ.12.27லட்சத்திற்கு ஏலம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 70 வாகனங்கள், 12 லட்சத்து 27ஆயிரத்து 200ரூபாய்க்கு ஏலம் போனது.கடலுார் மாவட்ட தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு வழக்குகளில் ஏழு நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 92 இரண்டு சக்கர வாகனங்கள் என நுாறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் நேற்று காலை கடலுார் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள எஸ்.ஆர்.ஜே.,திருமண மண்டபத்தில் ஏலம் நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.,கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,சவுமியா ஆகியோர் உடனிருந்தனர். நேற்று 70 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் 12லட்சத்து 27ஆயிரத்து 200ரூபாய் வசூலானது.வசூலான தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை