உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்., அழகிரி பிறந்தநாள் புவனகிரியில் கொண்டாட்டம்

காங்., அழகிரி பிறந்தநாள் புவனகிரியில் கொண்டாட்டம்

புவனகிரி : தமிழ்நாடு காங்., முன்னாள் தலைவர் அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு, புவனகிரி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். காங்., மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் வரவேற்றார். விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் சித்தார்த்தன், சேரன், மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கவுன்சிலர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் கண்ணன், பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, அன்னதானம் வழங்கினார். நிர்வாகிகள் அருள்ஜோதி, பாலமுருகன், பெருமாள், மணிவண்ணன், மனோகர், செந்தில், கலைமாமணி, தக்ஷிணாமூர்த்தி, பக்கிரிசாமி, கமலக்கண்ணன் பங்கேற்றனர். சட்டசபை தொகுதி செயலாளர் சம்பத் நன்றி கூறினார். முன்னாள் தலைவர் அழகிரி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை