உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகுல் மீது வழக்கு காங்., ஆர்ப்பாட்டம்

ராகுல் மீது வழக்கு காங்., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: அசாமில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, விருத்தாசலத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அசாம் மாநிலத்தில், ராகுல் எம்.பி., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வேல்முருகன், ராவணன், சாந்தகுமார், ராமச்சந்திரன், பரமசிவம், கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ரஞ்சித்குமார் வரவேற்றார்.அதில், ராகுல் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் ராஜா, ராஜீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை