கட்டுமான தொழில் முனைவோர் விழா
கடலுார்; கடலுார், கூத்தப்பாக்கத்தில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் சார்பில் முதலாம் ஆண்டு குடும்ப விழா நடந்தது.மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். பாலகுமாரன், முத்துக்குமரன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜன் வரவேற்றார். மாநில செயலாளர் யுவராஜ், மாநிலத் துணைத் தலைவர் குமார், மாநில இணைச்செயலாளர் பானுகோபன், ஜெக முருகன், தலைமை நிலைய செயலாளர் ரஜினிராஜ், துணை செயலாளர் செந்தமிழ் கொற்றவன், துணை செயலாளர் பாபு, மண்டல தலைவர் முருகேசன், செயலாளர் செந்தில்வேல், பொருளாளர் அருள், துணைத் தலைவர் ஜெயராமன், கணேசமூர்த்தி பேசினர். சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிர்மல்ராஜ் நன்றி கூறினார்.