உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் மாநகராட்சி 23வது வார்டு மற்றும் சூரப்பநாயக்கன்சாவடியில் இருவேளையும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். பான்பரி மார்க்கெட்டில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாநகரில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர குழு உறுப்பினர் பழனி, செந்தமிழ்செல்வன், ராஜா, மணி, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர் பக்கீரான் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை