மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
10-Feb-2025
வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, 53; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் - பெரியநெசலுார் செல்லும் டவுன் பஸ்சை ஓட்டிச் சென்றார். பரவளூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பைக்கில் வந்த மணவாளநல்லுார் புது காலனியைச் சேர்ந்த மோகன், 23; சந்தோஷ்குமார், 19; ரகு, சந்துரு ஆகியோர் பஸ்சை மறித்து, டிரைவர் தங்கதுரையை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மோகன் உட்பட 4 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். பைக்குகள் மோதி வாலிபர் பலி
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பஞ்சன் மகன் அஜித்குமார், 21; விவசாயி. தமிழ்குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் குமரேசன் மகன் சூர்யா, 17; நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் மாலை வெள்ளகேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்று வீடு திரும்பினர். காராமணிக்குப்பம் அருகே எதிரே வந்த பைக் மோதியதில் அஜீத்குமார், சூர்யா இருவரும் படுகாயமடைந்தனர். உடன், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று மதியம் அஜித்குமார் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். குட்கா விற்றவர் கைது
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று குறுக்கத்தஞ்சேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் தாமோதரன், 48; என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன், வழக்குப் பதிந்து தாமோதரனை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வீடு புகுந்து திருட்டு: வாலிபர் கைது
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வளர்மதி, 55; இவர், கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 கிராம் சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கோபாலபுரம் காலனியைச் சேர்ந்த மனோகரன் மகன் வீரச்செல்வன், 19; என்பவரை கைது செய்தனர். மனைவி மாயம்: கணவர் புகார்
திட்டக்குடி அடுத்த புலிவலம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி வெண்ணிலா, 23; இவர், கடந்த 12ம் தேதி பகல் 2:00 மணியளவில் இயற்கை உபாதைக்கு செல்வதாகக் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுபாட்டில் விற்றவர் கைது
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாட்டமாம்பட்டு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், 36; புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடன், அவரை கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
10-Feb-2025