உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லூரியில் பரிசளிப்பு விழா

கல்லூரியில் பரிசளிப்பு விழா

விருத்தாசலம் : கொளஞ்சியப்பர் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கிடையேயான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது. இதில் கல்லூரியின் அனைத்துத் துறையிலும் ஆர்வமுள்ள மாணவ - மாணவிகள் பங்கேற்று பரிசு பெற்றனர். கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) சுப்ரமணியன் போட்டியில் வெற்றி வெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில் பேராசிரியர்கள் சுகன்யா, சிவக்குமார், தயாளன், குணசேகரன் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் செல்வமணி, அய்யாதுரை, கார்த்திகேயன், விக்னேஷ், ஆதிசிவம், மணிகண்டன், சபரிநாதன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ