உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., மாநாட்டில் இளைஞர்கள்

கடலுார் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., மாநாட்டில் இளைஞர்கள்

கடலுார் : சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டிற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் 500 இளைஞர்கள் பங்கேற்றனர்.சேலத்தில் நேற்று தி.மு.க., இளைஞரணி இரண்டாவது மாநாடு, இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த மாநாட்டிற்கு, கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையிலும், டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் 500 பேர் பங்கேற்றனர்.அப்போது, மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் வெள்ளை சீருடையில் வேன் மற்றும் கார்களில் சென்று பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ