உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுார் அழகப்பா ஜூவல்லரி உரிமையாளர் இல்ல திருமணம்

 கடலுார் அழகப்பா ஜூவல்லரி உரிமையாளர் இல்ல திருமணம்

கடலுார்: கடலுார் ஸ்ரீ அழகப்பா ஜூவல்லரி உரிமையாளர் குமார் - ஆனந்திகுமார் தம்பதி மகன் விக்னேஷ்வரன், விழுப்புரம் ராஜேந்திரன் - வாசுகி ராஜேந்திரன் தம்பதி மகள் சுனிதா திருமணம் புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. அழகப்பா ஜூவல்லரி நிறுவனத்தினர்கள் நடேசன்பாபு, அழகப்பா மணி, அழகப்பன் முத்து மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் சம்பத், அய்யப்பன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் குமார், முன்னாள் சேர்மன்கள் சுப்ரமணியன், ராஜேந்திரன், பழக்கடை மதியழகன், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர்கள் கணேசன், ரவிசங்கர், ஸ்ரீவள்ளி விலாஸ் நிறுவனத்தினர், வள்ளி விலாஸ் முரளி ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். ஜெய் மகாவீர் ஜூவல்லரி பிரதீப் குடும்பத்தினர், ஸ்ரீபாடலி அன்டு கோ ஜூவல்லரி அனந்தகிருஷ்ணன், ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி விஜயகுமார், ஆனந்தா ஜூவல்லரி ராஜ், நியூ ரத்தனா ஜூவல்லரி சுகுமாறன், ஸ்ரீஅதிர்ஷ்டம் ஜூவல்லரி திருமலை, சங்கர், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நகைக் கடை உரிமையாளர்கள், நகை தொழிலாளர்கள், வியாபாரிகள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மணமக்களை வாழ்த்தினர். மணமகன் சகோதரர் சத்தியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்