மேலும் செய்திகள்
பெண் வழக்கறிஞர் - பழநி கோயில் பணியாளர் பிரச்னை
15-Jul-2025
கடலுார்: நெய்வேலி அருகே சாலை விபத்தில் இறந்த இன்ஜினியர் குடும்பத்திற்கு 2.16 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்க கடலுார் கோர்ட் உத்தரவிட்டது. நெய்வேலி 13 வது பிளாக்கை சேர்ந்தவர் பழனி. என்.எல்.சி.,யில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி நெய்வேலி மகாத்மா காந்தி சாலை பிளாக் 18 ஓ.பி.சி அலுவலகம் எதிரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இறந்த என்.எல்.சி., பொறியாளர் பழனி குடும்பத்தினர் கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்ட ஈடு வழக்கு சிறப்பு மா வட்ட நீதிமன்றம் எண் 1ல் தாக்கல் செய்தனர். விசாரணை செய்த நீதிபதி ஆனந்தன், இறந்த பழனி குடும்பத்தினருக்கு இழப்பீடாக ஒரு கோடியே 95லட்சத்து 39ஆயிரம் மற்றும் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து மொத்தம் 2 கோடியே 16லட்சம் ரூபாய் வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
15-Jul-2025