உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேகத்தடையில் மோதி ராணுவ வீரர் பலி

வேகத்தடையில் மோதி ராணுவ வீரர் பலி

கடலூர் : பைக்கில் சென்ற ராணுவ வீரர் வேகத்தடையில் மோதி படுகாயமடைந்து இறந்தார். விருத்தாசலம் அடுத்த மேற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் மகன் வேல்முருகன், 31. ராணுவ வீரர். விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்திருந்த வேல்முருகன் கடந்த 19ம் தேதி இரவு தனது மோட்டார் பைக்கில் மங்களம்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே இருந்த வேகத்தடை தெரியாததால், வேகமாக பைக் சென்றதில் வேல்முருகன் தூக்கி எறியப்பட்டார். தலையில் படுகாயமடைந்த அவர் சென்னையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை