உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வருவாய் ஆய்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

வருவாய் ஆய்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத் தில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க் கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தாசில்தார் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன், நில அளவை பிரிவு அலுவலர் ஷாஜகான், தலைமையிடத்து துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு பொதுமக்களின் நலன் கருதி பட்டா மாற்றத்திற்கு வழங்கப்பட்ட புதிய ஆணை குறித்து பேசப்பட்டது. கடந்த காலங்களில் பட்டா மாற்றத்திற்கு நல அளவை பிரிவு அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. இதனால் கால விரயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது வி.ஏ.ஓ.,க்களிடம் பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது. ஆகவே வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பு கவனிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் தாய் கிராமத்தில் முதல் நாளும், மற்ற கிராமங்களில் அடுத்தடுத்து நாளும் சென்று பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ