உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பன்றிகள் மாயம்: போலீசில் புகார்

பன்றிகள் மாயம்: போலீசில் புகார்

சிதம்பரம் : பன்றிகளை காணவில்லை என உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். தனது வீட்டு தோட்டத்தில் பன்றிகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை பன்றிகளுக்கு உணவு கொடுக்க தோட்டத்திற்கு சென்றார். அப்போது தோட்டத்தில் இருந்த 38 பன்றிகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !